அன்று சசிகலா..! இன்று நீங்கள்..! மோடி கைபட்டதால் மரண பீதியில் விஜயபாஸ்கர்!

சென்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தோளை பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து விட்டு சென்றது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


சென்னை ஐஐடி நடைபெற்ற பட்டமளிப்பு மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவரை தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்மொழியின் பெருமையைப் பற்றி பேசியதற்கு, தம்பிதுரை நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புத்தகத்தோடு ரோஜாப்பூ அளித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் அமைச்சரின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த மோடி அங்கிருந்த சசிகலா தலையில் கை வைத்துவிட்டு சென்றார். அதன் பிறகு இரண்டே மாதத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இந்த நிலையில் தான் தற்போது சென்னை வந்த மோடி விஜயபாஸ்கரை தட்டிக் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா மறைவின்போது சசிகலாவின் தலையில் தன் இடது கையை வைத்து ஆறுதல் சொன்னார் நரேந்திர மோடி. பின்னர சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை உறுதி செய்யப்பட்டு தண்டனை அனுபவிக்க சென்றார் சசிகலா. இப்போது விஜயபாஸ்கருக்கும் இடது கையால் தட்டிகொடுத்ததுதான் பேச்சுப் பொருளாக மாறிவிட்டது.  

இதுகுறித்து அரசல் புரசலாக அதிமுகவினர் பேசியபோது “மோடி இடது கையால் தட்டிக்கொடுத்தால் ஆபத்து வரப்போகிறது என்பது அர்த்தம். ஏற்கெனவே குட்கா வழக்கில் விசாரணைகள் முடிவுற்று, அமைச்சருக்கு எதிரான அறிக்கையை சி.பி.ஐ மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

சுமார் 30 அமைச்சர்கள் வரிசையில் நின்ற நிலையில் விஜயபாஸ்கரை மட்டுமே மோடி தட்டிக் கொடுத்தார். அதுவும் தோளில் தட்டியுள்ளார். மேலும் அமைச்சர்களிலேயே அதிக வழக்குகள் அதிக பிரச்சனைகள் விஜயபாஸ்கருக்கு தான் உள்ளது. இதனால் பாஜக அரசின் அடுத்த டார்கெட் நீ தான் என்பதை விஜயபாஸ்கரிடம் மோடி சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கலாம் என்று பீதி கிளப்புகிறார்கள்.

இதுகுறித்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், “அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க வந்திருந்த மோடி, அமைச்சரை தட்டிக் கொடுத்து பேசினார். அப்போதும், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாகச் வீண் வதந்தியை பரப்பினார்கள் என தெரிவித்தனர். மேலும் சகஜமாக உரையாடுவது பிரதமரின் வழக்கம். விஜயபாஸ்கரிடமும் அப்படித்தான் உரையாடினார். மடியில் கனமில்லாதபோது எதற்காகப் பயப்பட வேண்டும்?” என்கின்றனர்.