அத்திவரதரை தரிசிக்கிறார்கள் மோடி மற்றும் ரஜினிகாந்த்! காஞ்சிபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

அத்திவரதரை தரிசிக்க நடிகர் ரஜினிகாந்த் நாளை காஞ்சிபுரம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 1709ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் குளத்திற்குள் அத்திவரதர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே வந்து அத்திவரதர் தரிசனம் கொடுத்து வருகிறார்.

அதன் கடந்த 15 நாட்களாக அத்திவரதர் சயன மண்டபத்தில் இருந்த படி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். குடியரஜசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை அத்திவரதரை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊடகங்களில் அத்திவரதர் குறித்த செய்தி முக்கிய இடம் பிடித்து வருவதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இசை அமைப்பாளர் அத்திவரதரை தரிசனம் செய்தார். பிரதமர் மோடி 23ந் தேதி அத்திவரதர் படுத்திருக்கும் கோலத்திலும் 24ந் தேதி நின்று அருள்பாலிக்கும் கோலத்திலும் தரிசிக்க உள்ளார். இதனால் அங்கு ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகிறது.