அது என் அக்காள் செல்போன்..! திருப்பிக் கொடுங்க ப்ளீஸ்! திருடனிடம் கெஞ்சிய தம்பி..! அதிர்ச்சி காரணம்!

திருவள்ளூரில் செல்போனை திருடிச் சென்ற திருடன் திருப்பி தர வேண்டுமென்றால் 6000 ரூபாய் பணம் தர வேண்டும் என்று பேரம் பேசிய சம்பவம் அப்பகுதியில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


 திருவள்ளூரில் அரசு பெண் ஊழியர் ஒருவரது வீட்டில் திருடன் ஒருவன் 19 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், செல்போன் ஒன்றையும் இரவோடு இரவாக வீட்டில் ஆள் இல்லாத பொழுது திருடிச் சென்றுள்ளார் . இதையடுத்து செல்போனை திருடிச் சென்ற திருடன் அதனை சுவிட்ச் ஆஃப் செய்யாமல் கையில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்து உள்ளார்.

பின் செல்போன் உரிமையாளரின் தம்பி அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள நீங்கள் வைத்திருப்பது எனது அக்காவின் கைபேசி அது அரசாங்கத்தின் சார்பில் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆகையால் அதை திருப்பித் தருமாறு திருடனிடம் வேண்டுகோள் வைத்தார்.

திருடனும் ரூபாய் 6 ஆயிரம் ரொக்கப் பணத்தை என்னிடம் தந்தால் திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளிக்க காவல்துறையினரும் அவனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது காவல்துறையினரிடமும் 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் செல்போனை திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் செல்போன் உரிமையாளர்களிடம் பேசிய திருடன் நீங்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் சரி நீங்கள் ஆறாயிரம் ரூபாய் கொடுத்தால் எப்படி இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு சென்றேனோ அதேபோல் இரவோடு இரவாக செல்போனை திருப்பி தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் ஒரே வீட்டில் இவ்வளவு பணத்தையும் போனையும் எடுத்துக்கொண்டு சென்று உள்ளீர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா? என்று கேட்க சிரித்துக் கொண்டே போனை கட் செய்து உள்ளார்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.