மோடி நாட்டின் காவலாளி இல்லை! களவாணி! ராகுல் முன்னிலையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்!

சேலம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடியை விமர்சித்து ஸ்டாலின் பேசியதை ராகுல் ரசித்து கேட்டார்.


சேலம் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கின்றன.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ. பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ. ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என முதல் முதலில் முன்மொழிந்தது நான்தான்.

விவசாய கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, மாநில உரிமைகளைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது. விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என ஊர் ஊராய் பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி.பழனிசாமி. விவசாயி நாட்டை ஆள்வது பிரச்சினையல்ல, ஒரு விஷவாயு நாட்டை ஆள்வதே பிரச்சினை.

பிரதமர் மோடி காவலாளி அல்ல. களவாணி. ஏழைத்தாயின் மகன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.