தி.மு.க.வுக்கு நோ சான்ஸ்… மு.க. அழகிரி திட்டவட்டம். அடுத்த மாதம் புதிய பாய்ச்சல்.

எந்த நேரமும் கட்சியை தொடங்குவார் மு.க.அழகிரி என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார். கோபாலபுரத்தில் இருக்கும் அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.


அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். ‘’வரும் தேர்தலில் என்னுடைய பங்களிப்பு இருக்கும் என்பது உறுதிதான். தேர்தலில் ஓட்டுப்போடுவது,ம் பணியாற்றுவதும் பங்களிப்பு தான். 

வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். ஆனால், தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன்.’’ என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க. அழகிரியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்பட்ட விவகாரம், இதன் மூலம் பொய் என்பது தெரியவந்துள்ளது.