உலக அழகிப்போட்டியில் தமிழச்சி! எத்தனையாவது இடம் கிடைத்தது தெரியுமா?

உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ்க்கு எத்தனையாவது இடம் கிடைத்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.


சுமார் 118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் உலக அழகி பட்டத்திற்காக சீனாவின் சன்யா நகரில் திரண்டிருந்தனர். நான்கு சுற்றுலாக இந்த போட்டி நடைபெறும். 4வது சுற்றில் வெற்றி பெறும் 30 பேர் 3வது சுற்றுக்கு தகுதி பெறுவர். 3வது சுற்றில் வெற்றி பெறும் 12 பேர் 2வது சுற்றுக்குள்நுழைவர். 2வது சுற்றில் வெற்றி பெறும் 5 பேர் இறுதிச் சுற்றில் கலந்து கொள்வர்.


   அந்த வகையில் 118 பேர் ஒன்றாக போட்டியிட்ட நிலையில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் சிறப்பாக செயல்பட்டு முதல் 30 இடங்களுக்குள் வந்தார். இதன் மூலம் அவர் எளிதாக வென்று 12 பேர்களுக்கான அடுத்த சுற்றுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுக்ரீத்தி வாசை விட மற்ற நாடுகளின் அழகிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் அனுக்ரீத்தி வாசுக்கு அடுத்து சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அனு 3வது சுற்றுடன் நடையை கட்டினார்.   தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதல் முறையாக உலக அழகிப்பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த ஆண்டு தான் இந்தியாவை சேர்ந்த மனுசி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார். அந்த வகையில் அனுக்ரீத்தியும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பட்டத்துடன் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுக்ரீத்தி வாசுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.