விருதுநகரை தேமுதிகவிற்கு கொடுக்க வேண்டாம் என்றேன்! எடப்பாடி கேட்கவில்லை! அமைச்சர் வருத்தம்!

விருதுநகர் தொகுதியை தேமுதிகவிற்கு கொடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.


சென்னை கீழ்ப்பாக்கத்தில்தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விஸ்கர்மா சமுதாயத்தின் மீது எடப்பாடி பழனிசாமி அக்கறை கொண்டவர். அண்ணன் தம்பியாக எங்கள் சமுதாயத்தை நினைக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. அவரது கைகளை பலப்படுத்த விஸ்வகர்ம சங்கம் முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

ராமநாதபுரத்தில் அன்வர் ராஜாவுக்குதான் சீட் வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்தனர். ஆனால் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான பா... கேட்டதால் அனவர் ராஜாவிற்கு சீட் வழங்க முடியாமல் போனதுசிறுபான்மையினருக்கு அதிமுக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

விருதுநகரை தேமுதிகவுற்கு கொடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் முதலமைச்சர் தன்னை அழைத்து 'தம்பி கூட்டணி கட்சியினருக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் அத்தொகுதியை தேமுதிக வழங்குவோம்' எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டம் அமோகமாக கூடுகிறது.

முதலமைச்சருக்கு கூட்டமில்லை என்று கூறுவதெல்லாம் அவர் செல்லும் வழியில் எடுத்த காட்சிகள், திட்டமிட்ட சதி அது. தமிமும் அன்சாரி பா..கவிற்கு ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் இந்த ஆட்சிக்கு அவர் ஆதரவாக இருப்பார், பொறுத்திருந்து பாருங்கள்.

திமுக ஜெயிக்கப்போவது இல்லை என்பதால்தான் தேர்தல் வாக்குறுதியை தாராளமாக சொல்லியுள்ளனர். நீட் தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டது திமுக, அதைப்பற்றி பேசவேக் கூடாது திமுக. வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்னு சொன்னால் தேர்தல் விதிமீறலாகும்..

அதனால்தான் கவனமாக வலியுறுத்துவோம் என நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம். பட்டாசு தொழிலை காத்த நாயகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். பா... இதுவரை தனி மெஜாரிட்டியில் இருந்தது. இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கெடுக்கும் என்பதால் எங்கள் கோரிக்கையை வலிமையாக கூறுவோம்.