எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா..? நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்ட அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்துக்கு கேடு விளைவிக்கும் புதிய கல்விக் கொள்கையில் இரண்டு மொழி மட்டுமே எங்கள் கொள்கை. மூன்று மொழிகளை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இதனை பெரிய பா.ஜ.க. தலைவர்களே அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில், நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரமாக ஒரு கருத்து கூறினார். அதாவது, ‘அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதாவது தி.மு.க.வின் பாதையில் அ.தி.மு.க. செல்கிறது என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் நச்சென்று ஒரு பதில் கொடுத்தார். 

 “ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும், அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். எஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்.எல்.ஏ.வாக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம், பென்சன் ஆகியவற்றைத் திரும்பித் தர வேண்டும். எஸ்.வி.சேகர் தருவாரா?

இதற்கு அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் அவர் பேசும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். இதற்கு பதில் போடுவதாக நினைத்து எஸ்.வி.சேகர், ‘தமிழக அரசுதான் எனக்கு சம்பளம் கொடுத்தது. மானம், ரோஷம் பற்றி பேசலாமா?’ என்று கேட்டுள்ளார். ஆக, எஸ்.வி.சேகருக்கு நேரம் சரியில்லை. அம்புட்டுத்தான்.