சாலையின் வளைவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி! 5 பேரின் உயிரை குடித்த கொடூரம்|!

கேரளாவில் பாலக்காடு நோக்கி சென்ற மினி வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி, 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 கோவை குனியமுத்தூரை சேர்ந்த ஒருவரின் உறவினருக்கு கேரளாவில் குழந்தை பிறந்துள்ளது. இதனை காண ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் ஆம்னி வேனில் கேரளா புறப்பட்டுள்ளனர். வேனை ஷாஜகான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் தமிழக எல்லையை கடந்து கேரளாவின் வாளையாரை நெருங்கியுள்ளது.

நான்கு வழிச்சாலையான அங்கு கண்டெய்னர் லாரி ஒன்று வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வளைவில் வாகனங்கள் நிற்காது என்கிற நம்பிக்கையில் ஓட்டுனர் ஷாஜகான் வழக்கமான வேகத்தில் காரை இயக்கியுள்ளார். ஆனால் முன்னே திடீரென கண்டெய்னர் லாரி வந்ததும் ஷாஜகானால் வேனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனால் லாரியின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதிய வேன் உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் ஓட்டுனர் ஷாஜகான் உள்ளிட் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். மேலும் 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானோர் உடல் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பபட உள்ளது.