ஓடும் ரயில்..! வலியல் துடித்த கர்ப்பிணி..! குறைப்பிரசவம்..! ஆனால் ராணுவ பெண் டாக்டர்கள் இருவர் சேர்ந்து செய்த செயல்..!

டெல்லி: ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ராணுவ டாக்டர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


சனிக்கிழமையன்று, கர்ப்பிணி பெண் ஒருவர், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், மருத்துவமனைக்குச் செல்வதற்காக பயணம் செய்தார். ஆனால், ரயில் குலுங்கி குலுங்கிச் சென்றதால், அவருக்கு பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி தொடங்கியுள்ளது. கடும் வலியில் துடித்த அவருக்கு, உதவிக்கரம் நீட்ட, ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். இதன்படி, அதே ரயிலில் பயணித்த இந்திய ராணுவ டாக்டர்கள் கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமந்தீப் ஆகியோரை அணுகி, ரயில் ஊழியர்கள் தகவலை தெரிவித்தனர்.  

உடனடியாக, சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய அந்த 2 டாக்டர்களும் உரிய முறையில் பிரசவம் பார்த்து, பெண்ணையும், குழந்தையையும் உயிருடன் காப்பாற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டியுள்ள இந்திய ராணுவம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.   

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்து பெண்ணை காப்பாற்றிய அந்த 2 டாக்டர்களுக்கும், சமூக ஊடகங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.