கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை கண்டித்த மனைவியை இராணுவத்திலிருந்து விடுப்பு எடுத்து வந்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விமானத்தில் பறந்து வந்து மனைவி கதையை முடித்த ராணுவ வீரர்! தகாத உறவை கண்டுபிடித்ததால் கொடூரம்!

கிருஷ்ணகிரி அருகில் குருபரப்பள்ளி பகுதியில் ராஜேஷ் மற்றும் கௌதமி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதில் ராஜேஷ் ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். மகனையும் மகளையும் கௌதமி கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் ராஜேஷுக்கும் கர்நாடகாவில் உள்ள தும்கூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த மனைவி கௌதமி ராஜேஷை தொடர்ந்து கண்டித்துள்ளார்.
இந்த விஷயம் அறிந்த கலைவாணி, உங்கள் மனைவி உயிரோடு இருக்கும் வரை நாம் இப்படி அந்தரங்கமாக மட்டுமே இருக்க முடியும் என ராஜேஷை உசுப்பிவிட்டு கொலை செய்யவும் தூண்டியுள்ளார்.
இதை அப்படியே கேட்டு, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் விடுப்பு எடுத்து மனைவியை அக்கறையாக பார்க்க வந்தது போல வந்து கௌதமி இரவு தூங்கும் வரை காத்திருந்து அவரது முகத்தில் தலையணையை அமுக்கி கொலை செய்துள்ளார்.
கௌதமியின் இறப்பில் சந்தேகம் கொண்ட போலீஸ் பல கோணங்களாக ராஜேஷை விசாரித்தனர். இதில் கடந்த ஒன்றரை வருடமாக கலைவாணி உடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாகவும் இதனைக் கண்டித்த மனைவியை கலைவாணியின் தூண்டுதலின் பெயரில் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
போலீசை திசை திருப்ப நகை திருட்டு போனதாகவும் அந்த திருட்டில் என் மனைவி கொலை செய்யப்பட்டதாகவும் நாடகமாடினேன் எனவும் விசாரணையில் ஒப்புக்கொண்டார் ராஜேஷ்.
கொலை, திசைதிருப்பல் போன்ற பிரிவுகளில் ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.