யாரும் இல்லாத கும்மிருட்டு! பைக்கில் சென்ற இருவர்! திடீரென பாய்ந்த உருவம்! இதயத் துடிப்பை நிறுத்திய சம்பவம்! வைரல் வீடியோ உள்ளே!

இந்திய வனத்துறை அதிகாரி கசந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பிட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.


கசந்தா தனது டிவிட்டரில், காடிகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக வலம் வருகிறது. 

அந்த விடியோவில் , இரவு நேரம் மரங்கள் அடர்ந்த கும் இருட்டில் அந்த வழியாக சில வாகனங்கள் காத்திருந்துள்ளன, ஆனால் யாதும் எதிர்பாராத விதமாக , அந்த பக்கமாக மிக வேகமாக கடந்து சென்ற இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் இருந்தனர் , கண் இமைக்கும் நேரத்தில் இருவரையும் அங்கு பதுங்கி , இருந்த சிறுத்தை மிக வேகமாக அவர்கள் இருவரையும் குறி வைத்து பாய, மயிரிழையில் இருவரும் அங்கிருந்து உயிர் தப்பி உள்ளனர்.

மற்ற நபர்கள் எல்லாம காட்டில் உள்ள சிறுத்தை செல்வதற்க்காக வழி விட்டு நிற்க , இளைஞர்கள் மட்டும் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது, அனைவரையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கும். மேலும் சமீபத்தில் , கேரள வயநாட்டில் கூட வாகனத்தில் சென்ற இளைஞர்களை சிறுத்தை துரத்தியதும் குறிப்பிடதக்கது.