ஒரே ஒரு நாள் சீட் பெல்ட் அணியாமல் அலட்சியம்..! நெஞ்சு எலும்பு உடைந்து இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத சம்பவம்!

நியூ மெக்சிகோ: சீட் பெல்ட் அணியாததால் இளம்பெண் படுகாயம் அடைந்திருக்கிறார்.


நியூ மெக்சிக்கோவை சேர்ந்தவர் ஆஷ்லி வால்டிராம் (27 வயது). இவர் கடந்த 2016ம் ஆண்டு  கார் ஓட்டிச் சென்றபோது, திடீரென சாலையில் கார் தலைகீழாக விழுந்து புரண்டுள்ளது. இதில், அவருக்கு, மண்டையோடு உடைந்ததோடு, கை, கால், தோள்பட்டை என அனைத்திலும் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.

இவர் சீட் பெல்ட் அணியாததே காயத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து சுய நினைவை இழந்த ஆஷ்லி கடந்த 3 ஆண்டுகளாக, உயிருக்குப் போராடி வந்தார். தற்போது சுய நினைவை மீண்டும் பெற்றுள்ளார். சில மணிநேரத்தில் உயிரிழந்துவிடுவார் என டாக்டர்கள் கூறிவந்த நிலையில், தொடர் அறுவை சிகிச்சைகளின் முடிவாக, தற்போது நலம்பெற்று எழுந்துள்ளார்.  

உடல் உறுப்புகள் காயம் அடைந்தது மட்டுமின்றி, மூளை, நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவற்றில் கடும் ரத்தக் கசிவு ஏற்பட்டு, ஆஷ்லி உயிருக்குப் போராடி வந்தார். அவற்றை எல்லாம் மீறி தற்போது உடல்நலம் தேறி, நலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.