தமிழில் 'திமிரு' திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் விநாயகன் மீது சமூக ஆர்வலர் ஒருவர் மீது மீடூ வில் புகார் அளித்துள்ளார்.
மலையாள பெண் எழுத்தாளரை படுக்கைக்கு அழைத்த தமிழ் நடிகர்! வைரல் பேஸ்புக் போஸ்ட்!

மலையாள நடிகரான விநாயகன் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். விஷாலுடன் இணைந்து நடித்த திமிரு திரைப்படத்தில் வில்லன் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் விநாயகன். இவர் தற்போது மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் இவர் பாஜகவை பற்றி சில பதிவுகளை பதிவிடும் டிரெண்டிங்கில் இருந்தார். தற்போது சமூக ஆர்வலரான மிருதுளா தேவி என்பவர் மீடூ பக்கத்தில் இவரைப்பற்றி பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்காக விநாயகனுக்கு செல்போன் மூலம் கால் செய்துள்ளார்.
அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசியும் பாலியல் வார்த்தைகள் பேசியதாகவும், படுக்கைக்கு அழைத்ததாகவும் தன் அம்மாவைப் பற்றியும் அவதூறாக பேசியதாக இந்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மிருதுளா தேவி தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மலையாள நடிகர் விநாயகன் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.