புனே: கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
8 மாத கர்ப்பிணி மனைவியின் கழுத்தை கொடூரமாக அறுத்த கணவன்! காரணத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புனேவில் உள்ள புஜிவாடி பகுதியை சேர்ந்தவர் பிரவிண் என்கிற கோபால் (28 வயது). இவரது மனைவி பூஜா பிரவிண் கெவாண்டே (25 வயது). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்கள் முன்பாக, பூஜா கர்ப்பம் தரித்துள்ளார்.
அதேசமயம், திருமணமான நாள் முதலாகவே, கோபாலுக்கு மன ரீதியான பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, அவர் மனநல நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
குடும்பம் நடத்த போதிய பணம் இல்லை என்பதால் கோபாலுக்கு நாளுக்கு நாள் பைத்தியம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பூஜா கர்ப்பமானதால், தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கடந்த ஞாயிறன்று வீடு திரும்பிய பூஜா, தனது கணவருக்கு டீ போட்டு தரும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சமையலறையில் நுழைந்த கோபால், கர்ப்பிணி மனைவியை கழுத்தை அறுத்து கொன்றார்.
பிறகு, தன்னையும் காயப்படுத்திக் கொண்டார். இதைப் பார்த்து, அவர்களின் குழந்தை சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், பூஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது கணவர் கோபால் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.