மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! வெளியான புகைப்படங்களை பார்த்து திகைக்கும் பக்தர்கள்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் பேத்தி திருமணம் அங்கு மிகவும் பிரமாண்டாக நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனின் மகள் டாக்டர் அ.மதுமலர் - டாக்டர் க.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வாரம் மேல்மருவத்தூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பங்காரு அடிகளால் பேத்தி திருமணம் என்பதால் மேல்மருவத்தூரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் திருமண மண்டபம் அலங்காரத்தில் ஜொலித்தது. ஏராளமான விஐபிக்களுடன் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் உண்மையில் அனைவரையும் மூக்கில் மேல் விரல் வைப்பதாகத்தான் இருக்கிறது.