குடிகார மாணவிகளை மயிலாடுதுறை கல்லூரியில் இருந்து விரட்டிய நிர்வாகம்! பெண்ணுரிமைப் போராளிகளே குரல் கொடுங்களேன்!

சமீபத்தில் வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பீர் குடித்து, ஒரு மாணவரின் பிறந்த நாளை கொண்டாடுவதாக இருந்தது.


அது ஏதோ வெளி மாநில மாணவிகள் அல்ல, சாட்சாத் நம் தமிழ் பெண்கள்தான். ஆம், அந்த பெண்கள் அனைவரும் மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அந்த பெண்கள் அனைவரும் மாணவரின் அறைக்கே சென்று மது அருந்தி கொண்டாட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது.

கல்லூரியின் மானம், மரியாதை போய்விட்டது என்று நேற்று கல்லூரியில் இருந்து மூன்று மாணவிகளும் ஒரு மாணவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இனி, யாராவது இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், எப்படி இந்த விஷயத்தை பெண்ணுரிமைப் போராளிகள் அமைதியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் அதிசயமாக இருக்கிறது. ஏனென்றால், குடிப்பதற்கு ஆணுக்கு இருக்கும் உரிமையைப் போலவே பெண்ணுக்கும் இருக்கிறது, அவர்களை எப்படி கல்லூரியில் இருந்து நீக்கலாம் என்று போராட வேண்டாமா..?

லேட்டானாலும் பரவாயில்லை, களத்தில் குதியுங்கள் அம்மணிகளே.