கல்லூரி சென்ற இளம்பெண் மாலை வீடு திரும்பாததால் விருதுநகரில் பெற்றோர்கள் பதட்டம் அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தாலி கட்டிய கையோடு வெளியூர் சென்ற கணவன்..! இரவோடு இரவாக கம்பி நீட்டிய 20 வயது மனைவி! விருதுநகர் பரபரப்பு!

விருதுநகரில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர். இவருக்கு 20 வயதில் பானுரேகா என்ற பெண் இருக்கிறார். பானுரேகாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் என்பவருடன் திருமணம் ஆனது. ராஜ்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தார் பானுரேகா.
மேலும் அங்கிருந்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல, நேற்று காலை கல்லூரிக்குச் சென்ற பானுரேகா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த பெற்றோர்கள் அவரது கல்லூரி தோழிகளிடம் விசாரித்தனர். உரிய பதில் ஏதும் கிடைக்காததால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என தந்தை அழகர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் அவரது தோழிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இதர நண்பர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.