பாலியல் புகாருக்கு மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய நடிகை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவை வெளியே விடவா? பிரபல நடிகரை மிரட்டிய இளம் நடிகைக்கு நேர்ந்த விபரீதம்!

மராட்டிய நடிகரான சுபாஷ் யாதவ் மற்றும் நடிகை சாரா ஸ்ரவான் ஆகியோர் சேர்ந்து ஒரு படம் நடித்துள்ளனர். அந்த படத்திற்கு பிறகு சுபாஷ் யாதவ் மீது பாலியல் புகார் அளிக்கப் போகிறேன் என ஸ்ராவன் மிரட்டியுள்ளார். இதற்கு உதவியாக இன்னொரு நடிகை மற்றும் தரகரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். சுபாஷ் யாதவை ஸ்ராவன் உள்பட 4 பேர் மிரட்டுவதும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்பதும் ரகசியமாக வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என சுபாஷ் யாதவை மிரட்டியதோடு, மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிடாமல் இருக்க 15 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க சுபாஷ் யாதவ் தயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சாரா ஸ்ரவானுடைய தோழி ஒருவர் இந்த வீடியோவை ஒரு சில சமூக வலை தளங்களில் மட்டும் கசியவிட்டு அதன் மூலம் என்னை மிரட்டலாம் என நினைத்துள்ளார்.
ஆனால் வீடியோ வைரலாக பரவவே சுபாஷ் யாதவ் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக சுபாஷ் யாதவ், நடிகை மீது போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சாரா ஸ்ராவன், தரகர், மற்றொரு நடிகை உள்பட 4 பேர் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் சாரா ஸ்வராவ்ன முன்ஜாமின்றி பெற்றிருந்தார். இந்நிலையில் சாரா ஸ்ரவானின் முன்ஜாமீன் மனுவை புனே நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, நேற்று மும்பையில் இருந்த சாரா ஸ்ரவானை புனே போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்படும் சாரா ஸ்ராவன் 4வது நபராகும்.