ரஜினியை கன்னாபின்னாவென்று வெளுக்கும் மனுஷ்யபுத்திரன்!

போயஸ்கார்டன் கேட்டைத் திறந்து, மத்திய அரசின் உளவுத்துறையும் உள்துறையும் தோல்வி அடைந்துவிட்டது என்று கடுமையாக ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.


அது கண்டனமே இல்லை, அதுவும் ஒரு ஜால்ரா என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் பதிவு போட்டிருக்கிறார். மதவெறிக்கு இரண்டு வகையில் ஊழியம் செய்யலாம். முதலாவதாக கற்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டுபோய் நேரடியாக நிராயுதபாணியான மக்களின் மண்டையை உடைக்கலாம்.

அல்லது, கலவரத்திற்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை, இரண்டு பக்கமும் உள்ள தீவிரவாதிகள்தான் காரணம், இரண்டு சமூகங்களிடையே நல்லிணக்கம் தேவை, அமைதி வழியில் போராடவேண்டும் என்றெல்லாம் எருமை மாட்டில் மழை பெஞ்ச மாதிரி கூலா பேசலாம்.

எழுத்தாளர்- நடுநிலையாளர் போர்வையில் உள்ள சங்கி முட்டாப் பசங்களா, என்ன நடந்துகொண்டிருக்கிறது என கண்ணைத் திறந்து பாருங்கள்.. அரசும் இந்துத்துவா பயங்கரவாதிகளும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு சிறுபான்மை மக்கள்மீது போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் கருத்துச் சொல்லவில்லை என்று யார் அழுதார்கள்? 

மக்கள் அங்கே அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்..தெருவில் மல்லாக்க படுக்க வைத்து குறிகள் சோதிக்கப்படுகின்றன. எந்த உலகத்தில்டா வாழ்ந்துகொண்டு இதுபோன்ற முத்துக்களை உதிர்க்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.