திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த கட்சி ஒன்று அங்கிருந்து விலகி தினகரனுடன் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறிய முக்கிய கட்சி! தினகரனுடன் இணைய பேச்சுவார்த்தை!

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா செய்தியார்களிடம்
பேசினார்.
அப்போது, திமுக சார்பில் இருந்து எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. மாறாக ஆதாரவு தாருங்கல் எதிர் காலத்தில் வாய்ப்பளிக்கப்படும் என கூறியுள்ளனர்.
இந்த நாடாளுமன்ற தேர்தலின் நிலைப்பாடு குறித்து வருகின்ற 9ஆம் தேதி செயற்குழு கூட்ட உள்ளோம். அதன் பின்னரே மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்.
டிடிவி தினகரனோட கூட்டணி குறித்து பேசப்படுமா? என்ற கேள்விக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டம் நடத்தி பதில் அளிப்போம்.
கடந்த நாடாளுமன்ற
தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இதே போல் சட்டமன்ற
தேர்தலிலும் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்டது. ஆனால் இந்த
முறை கூட்டணியில் சீட் இல்லை என்று ஸ்டாலின் கூறிவிட்டார்.
இதனால் திமுக
கூட்டணியில் இருந்து வெளியேறி தினகரனை சந்தித்து அவருடன் கூட்டணி அமைக்க
ஜவாஹிருல்லா முடிவெடுத்துள்ளார்.