ஆட்சியைக் கலைச்சுடாதீங்க! உளவுத் துறை நோட் காரணமாக அமித் ஷாவிடம் சரண்டரான மணி அமைச்சர்கள்!

மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு ராஜன் செல்லப்பா ஒரு கலகக் குரல் எழுப்பினார். தன்னுடைய அரசியல் குரு வைத்தியலிங்கத்திற்கு மந்திரி சீட் வேண்டும் என்று குன்னம் ராஜேந்திரனும் கலகக் குரல் எழுப்பினார். இவர்கள் அமைச்சர் பதவிக்கு எழுப்பிய கோரிக்கை, ஆட்சிக்கே வேட்டு வைக்கிறது என்பதுதான் வேடிக்கை.


நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். ஆனால், அதற்குள் நாங்களாகவே கலைந்துபோவோம் எனும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்குள் அடிதடி ஆரம்பமாகிவிட்டது. பன்னீரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு எடப்பாடி போட்ட ராஜன் செலப்பா பிளான், இப்போது பூமராங் மாதிரி அவரையே தாக்குவதற்கு தயாராக உள்ளது. ஆம், புதனன்று நடைபெறும் கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து கட்சிக்குள் கலவரம் ஏற்பட்டால், ஆட்சியைக் கலைத்துவிட பா.ஜ.க. தயாராக இருக்கிறது என்று உளவுத் துறை முதல்வர் எடப்பாடிக்கு நோட் போட்டிருக்கிறது. 

அதைப் பார்த்ததும்தான் நிலவரத்தின் சீரியஸ் எடப்பாடியாருக்கு புரிய வந்திருக்கிறது. பன்னீரை எப்படியாவது நகட்டி விடலாம் என்று நினைத்தால், தன்னுடைய பதவிக்கே ஆபத்து என்றதும்தான், உடனே இரண்டு மணிகளையும் டெல்லிக்கு அனுப்பி அமித் ஷாவை சமாதானப்படுத்தச் சொன்னாராம். அதனால் பியூஸ் கோயலைப் பார்த்து நிதி கேட்பது மாதிரி சீன் போட்டுவிட்டு, அமித் ஷாவிடம் பவ்யமாக தகவல் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்ட அமித்ஷா எதுவும் பதில் சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறாராம். தகவல் அறிந்து எடப்பாடி குரூப் மிரண்டு போயுள்ளது. அதனால், நாளை யாரும் எதுவும் பஞ்சாயத்து கிளப்ப வேண்டாம் என்று போன் போட்டு கெஞ்சி வருகிறார்களாம்.