சென்னையில் நடந்தது போலவே கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு இளைஞர் பொது இடத்தில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அதே இடத்தில் தானும் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வயது பெண்ணை நடுரோட்டில் படுக்க வைத்து சதக்! சதக்! 22 வயது இளைஞன் வெறிச் செயல்! அதிர வைக்கும் காரணம்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள டெரலகட்டே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் ஒரு இளைஞன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை குத்திக்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள தனது தொண்டையை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார்.
சுஷாந்த் 22, என்பவர் அதே பகுதியில் உள்ள திஷா 20,என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நிலையில் இருவரும் சில நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுஷாந்த் கத்தியால் திக்ஷாவைக் குத்தியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே அவனை தடுக்க முயன்றுள்ளனர்.
பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் அவர் தனது தொண்டையை அடறுத்துக்கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில வைரலாகி பரவி வருகிறது.இந்நிலையில் காயம்பட்ட இருவரையும் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் ஒருதலை காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருவருக்கும்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சுயநினைவிற்கு வந்த உடன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.