5 ஆண்டுகளில் 330 சதவீதம் உயர்ந்த கேப்டன் மச்சானின் சொத்து மதிப்பு!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டில் சுதீஷின் சொத்து மதிப்பு 336 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அவர் சமர்ப்பித்துள்ள வேட்பு மனுவின் மூலம் தெரியவந்துள்ளது.


தன்னுடைய பெயரிலும் தனது குடும்பத்தின் பெயரிலும் 60 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.17.18 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.42.99 கோடி.

2014-ம் ஆண்டும் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சுதீஷ் போட்டியிட்டார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 33 கோடியே 91 லட்சமாக இருந்தது. அப்போதைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அவரின் சொத்து மதிப்பு 77 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக அசையாக சொத்துகளின் மதிப்பு 336% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுதீஷ் வருமான வரித் தாக்கல் செய்யும்போது 2013-14-ம் நிதியாண்டு மற்றும் 2017-18-ம் நிதியாண்டில் தன்னுடைய வருமானம் 53% குறைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதீஷ் பெரிய அளவில் தமிழகத்தில் பிசினஸ் எதுவும் செய்தது போல் தெரியவில்லை. இதே போல் அவர் நிர்வாக இயக்குனராக இருக்கும் கேப்டன் டிவியில் லாபத்தில் இயங்குவது போல் தெரியவில்லை. ஆனால் அவர் வருமானம் மட்டும் 330 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டதற்கு மிகப்பெரிய பேரம் நடந்ததாக புகார் எழுந்தது.