கடைசி நேரத்தில் பிடிக்கவில்லை என்று கூறிய மணப்பெண்! மொட்டை மாடியில் இருந்து குதித்த மணமகன்! பிறகு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

சூரத்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம், பலான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (21 வயது). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண் ராகுலை பிடிக்கவில்லை எனக் கூறி, நிராகரித்துவிட்டாராம். இதனால், திருமணம் பாதியிலேயே நின்றுவிட்டது.

இதற்கிடையே, அப்பெண்ணை, வேறொரு நபருக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன ராகுல், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேலே சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி, தற்கொலைக்கு முயன்ற அவரை போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். ஆனாலும், மனம் மாறாத ராகுல், திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். எனினும், சாமர்த்தியமாக போலீசார், தரையில் போர்வை விரிப்புகளை வைத்திருந்ததால், அவர் லேசான காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்.

இதனை அடுத்து, அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.