கரை புரண்ட காட்டாறு! சக மனிதர்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த மக்கள்! வெள்ளத்தில் பெருக்கெடுத்த மனிதநேயம்! எங்கு தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மழை வெள்ளத்தில் சிக்கிய ஒருவரை கிராம மக்கள் மனிதச் சங்கிலி போல் நின்று காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


இந்தூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கவுதம்புரா எனும் இடத்தில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதை பார்த்த அங்கு வசிக்கும் மக்கள் கறை பகுதிக்கு சென்று வெள்ளத்தின் எதிர்திசை நோக்கி மனித சங்கிலி அமைத்து நின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் மனிதச்சங்கிலி அமைத்து அடித்து செல்லப்பட்ட ஒருவரை காப்பாற்றினர்.

வெள்ளத்தில் சிக்கி மாயமான மற்றொருவரை தேடி வருகின்றனர். தங்களது உயிரை துச்சமென மதித்து மிகவும் ரிஸ்க் எடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை கிராம மக்கள் காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.