அந்த டிசைன் மோதிரத்தை எடுங்க..! நகைக்கடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம்!

இப்போதைய நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள அண்ணாசாலையில் நகை வாங்க வந்த இளைஞர் போலி நகையை அணிந்து வந்து கடையில் இருக்கின்ற சில நகைகளை திருடியுள்ளார்.


அண்ணாசாலையில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது.மேலும் 3-ம் தேதி ஒரு இளைஞர் தனக்கு மோதிரம் வேண்டும் என்று அந்த கடைக்குச் சென்று பல டிசைன்களை பார்த்துள்ளார். அப்போது கடையில் இருக்கின்ற ஊழியர்கள் திரும்பும் நேரம் பார்த்து தான் கொண்டு வந்த போலி மோதிரத்தை வைத்து விட்டு தங்கமோதிரத்தை திருடினார்.

இதை கவனிக்காமல் இருந்த ஊழியர்கள் இரவு நேரத்தில் வழக்கம் போல நகைகளை சரிபார்த்த போது போலி மோதிரத்தை கண்டறிந்தனர். இதனால் அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தான் அந்த இளைஞர் நகைகளை திருடியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கடையில் திருடிய முருகம்பாக்கத்தில் வசித்து வரும் கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்தனர்.விசாரணையில், இவர் இத்துடன் சேர்த்து 8 சவரன் நகைகளை திருடியுள்ளார் என தெரியவந்துள்ளது. இவர் பி.டெக் படிக்கும் ஒரு பட்டதாரி.