5 ஆண்கள் சேர்ந்து 1 ஆணை ரேப் செய்த கொடூரம்! மாலை நடைப் பயிற்சி சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

மும்பையில், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நபரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பேலாபூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயது நபருக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. வழக்கம்போல அலுவலகம் சென்ற அவர், மாலை நேரத்தில் அருகில் உள்ள வாஷி பகுதியில் உள்ள சாகர் விகார் ஏரி பகுதியில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த போதை ஆசாமிகள் 5 பேர் அவரை ஆண் என்றும் பாராமல் கடத்திச் சென்று, பலாத்காரம் செய்தனர். மயங்கி விழுந்த அவரை அத்துடன் விடாமல், அவரது ஆசன வாயில் தேங்காய் ஓட்டை சொருகிவிட்டுச் சென்றுள்ளனர்.  

அலுவலகம் சென்றவர் நள்ளிரவும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அந்த நபரின் குடும்பத்தினர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். பிறகு, போலீசாருடன் இணைந்து, தேடுதல் நடத்தியபோது, சாகர் விகார் ஏரிக்கரையோரம் அவர் அலங்கோலமாகக் கிடந்ததை கண்டறிந்தனர்.

உடனடியாக, அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தியதில், 5 பேர் மிருகத்தனமாக ஆண் என்றும் பாராமல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அத்துடன் அவரது ஆசனவாயில் செருகியிருந்த தேங்காய் ஓட்டை டாக்டர் வெளியே எடுத்துவிட்டார். இதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என நினைத்தால், நாடு போகிற போக்கில் ஆண்களுக்கும் பாதுகாப்பு குறைந்துவருவது வேதனை அளிப்பதாக உள்ளதென்று, இந்த சம்பவம் பற்றி போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.