படுத்த படுக்கையாக இருக்கும் 86 வயது தாயை கற்பழித்த கொடூரன்!

ஆந்திர மாநிலத்தில் படுத்த படுக்கையாக இருக்கும் 86 வயது தாயை பாலியல் பலாத்காரம் செய்த கேடுகெட்ட மகனை போலீசார் தேடி வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 86 வயது `மூதாட்டி உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருக்கிறார்இவர் தனது குடிகார மகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

 

இங்கு போதையும் முறைகெட்ட காமமும் கொடூரனின் கண்ணை மறைத்துள்ளது. பாதிக்கப்பட்ட தாய் இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தாங்கவொண்ணா துயரத்துடனும் வலியுடனும் கண்ணீருடனும் தெரிவித்த போதுதான் அவலம் வெளிச்சத்துக்கு வந்தது.

 

இந்த தகவல் பரவி சமூக ஆர்வலர் ஒருவரின் கவனத்துக்கு வந்தபோது அவர் இந்த விவகாரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். போலீசாரின் விசாரணையில் தாயை பாலியல் பலாத்காரம் செய்த இழி பிறவி ஒரு 46 வயது லாரி ஓட்டுநர் என தெரியவந்தது.

 

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை வேறு. குடிபோதையில் இருந்த அவன் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் அவன் தனது தாயை தாக்கினான்.

 

அதையும் கடந்து போதையும் ஆத்திரமு உச்சந்தலைக்கு ஏறியநிலையில், தாய் மீது பாய்ந்து சூறையாடினான். ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தாய் உடல் முழுவதும் காயங்களுடன் அசைய இயலாத நிலைக்கு ஆளாகியிருக்கிறார். 

அவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். சிக்கினால் கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.