28 வயது அக்காள்..22 வயது தங்கை! இரண்டு பேருக்கும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் தாலி கட்டிய 35 வயது நபர்! வைரல் வீடியோ உள்ளே!

போபால்: ஒரே மண்டபத்தில் அக்கா, தங்கையை திருமணம் செய்த நபர் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திலிப் என்கிற தீபு பாரிக்கர். இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், 28 வயதான வினிதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ள நிலையில், வினிதாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தனது கணவரையும், குழந்தைகளையும் பராமரிக்க, 2வது திருமணம் செய்துகொள்ளும்படி வினிதா, கணவரை வலியுறுத்தியுள்ளார்.   

இதன்பேரில், வினிதாவின் தங்கை ரச்சனாவை திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, ஒரே திருமண மண்டபத்தில் திலிப் மணமகனாக நிற்க, முதலில், வினிதா சம்பிரதாயத்திற்காக மாலையிட்டு, திருமணம் செய்தார். பிறகு, அவரது தங்கை ரச்சனாவை அதே மேடையில் திலிப் திருமணம் செய்துகொண்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.  

இந்தியாவில், சட்டப்படி 2 திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், திலிப்பின் இந்த திருமணம் பற்றி யாரும் புகார் அளிக்காததால் எதுவும் செய்யவில்லை என, சம்பந்தப்பட்ட பகுதியின் போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.