பாத்ரூமில் இருந்து நள்ளிரவு மர்ம சப்தம்! திறந்து பார்க்க கூடாததை பார்த்து அதிர்ந்த பெண்மணி!

நள்ளிரவில் வீட்டின் பாத்ரூமில் சத்தம் கேட்ட போது, திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


குஜராத் மாநிலம் வதோதராவில் மகேந்திரா என்பவர் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, திடீரென ஏதோ ஒரு உருட்டல் சத்தம் கேட்டதால் பூனை வந்திருக்கும் என நினைத்து சமையலறையில் தேடிப் பார்த்தார். ஆனால் அங்கு எந்த சத்தமும் இல்லை.  

தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்ததால், எங்கே என தேடிப் பார்த்தார். இறுதியில் தனது வீட்டின் பாத்ரூமில் இருந்து வந்திருப்பதை அறிந்த அவர் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. பாத்ரூமினுள் வாயை திறந்தவாறு பெரிய முதலை ஒன்று இருந்துள்ளது.  

உடனடியாக பாத்ரூம் கதவை மூடிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு வந்த வனத்துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு முதலையை மீட்டுள்ளனர். வீட்டின் அருகே ஆறு இருப்பதால் அங்கிருந்து முதலை வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.  

இச்சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.