புலியிடம் சிக்கிய இளைஞன்! திக் திக் நிமிடங்கள்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

சவுதி அரேபியாவில் புலி யின் கூண்டுக்குள் சிக்கிய இளைஞரை புலி கழுத்தை கவ்விய நிலையில் அதிர்ஷ்வசமாக உயிர் உடன் மீட்கப்பட்டார்.


சவூதி அரேபியாவில், ரியாத் என்னும் உயிரியல் பூங்காவிற்க்குள்ளாக புலியின் கூண்டுக்குள்ளாக இளைஞர் ஒருவர் சிக்கி இருந்தார். இதனைக் கண்ட மற்ற பூங்கா ஊழியர்கள் மிரண்டு போயினர், அதிலும் அந்த இளைஞர் யார் , எப்படி கூண்டுக்குள் விழுந்தார் என தகவல் தெரியவில்லை. 

நீண்ட போராட்டத்திற்க்கு பின்னர் கழுத்தை கவ்விய அந்த புலியை மயக்க ஊசி யை துப்பாக்கி மூலமாக செலுத்தி, அந்த இளைஞரை மீட்டனர். கழுத்தில் கடுமையான காயங்களை கொண்ட அந்த இளைஞரை மருத்துவ மனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். 

மேலும் , 24 வயது மதிக்க தக்க அந்த இளைஞர் செல்பி மோகத்தில் தவறி கூண்டுக்குள்ளாக விழுந்து விட்டாரா, அல்லது எதிர்ப்பாரத விதமாக விழுந்து விடாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.