ஸ்பெயின் நாட்டில் ஆபாச படத்தில் நடிப்பதற்காக நீச்சல் குளத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீச்சல் குளத்தில் ஆபாச படம்! ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த புதுமுக நடிகர்! நொடியில் நேர்ந்த விபரீதம்! இப்படியுமா சாவு வரும்?

ஸ்பெயின் நாட்டின் செவில்லி நகரில் கட்டிடம் ஒன்றில் ஆபாச திரைப் படம் ஒன்றின் படப் பிடிப்பு காட்சிகள் நடந்து கொண்டு இருந்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக ஓட்டலில் பணிபுரியும் 20 வயது தொழிலாளி ஒருவர் ஒத்திகை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் குளிப்பதற்காக இறங்கினார் அந்த இளைஞர்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் நீச்சல் குளத்தை விட்டு மேலே வரவில்லை. ஒருவேளை நீச்சல் தெரியாதோ என்னவோ நீண்ட நேரம் ஆகியும் அவர் நீருக்குள்ளே இருந்துள்ளார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து சிலர் நீச்சல் குளத்தில் இறங்கி அவரை தூக்கியபோது அவர் பரிதாபமாக இறந்து விட்டிருந்தார்.
தகவல் அறிந்து வந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மேலே வர முடியாமல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஒருவேளை இளைஞர் போதை மாத்திரை உட்கொண்டு விட்டு நீச்சல் குளத்தில் இறங்கி இருக்கலாம் என தெரிவித்த போலீசார் உடற் கூறு ஆய்வுக்குப் பின் முழுத் தகவல் தெரிய வரும் எனக் கூறினர்.
சம்பவம் நடைபெற்ற பங்களாவில் அடிக்கடி மது விருந்துகள் நடைபெறுவதாக தெரிவித்து உள்ள போலீசார் ஆபாச படம் எடுப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை.