பிரமாண்ட தண்ணீர் தொட்டி..! ஒரே ஒரு இளைஞர் செய்த ஆபத்தான செயல்! பிறகு நேர்ந்த விபரீதம்!

தண்ணீர் தொட்டியின் மேலே நின்றிருந்த இளைஞர் ஒருவர் அந்த தண்ணீர் தொட்டியின் கீழ்ப்பகுதியை உடைக்கும் ஆபத்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


பொதுவாக மரம் வெட்டுபவர்கள் எந்த கிளையை வெட்டப் போகிறோமோ அதை தவிர்த்து எதிர் கிளையில் அமர்ந்து வெட்டுவர். ஆனால் எந்த கிளையை வெட்டப் போகிறோமோ அதிலேயே அமர்ந்திருந்தால் என்ன ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் ஒரு ஆபத்தான சம்பவத்தைதான் இளைஞர் நடத்தியுள்ளார். 

ஒரு இளைஞர் தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் நின்று கொள்கிறார். பின்னர் அந்த தண்ணீர் தொட்டியின் கீழ்ப்பகுதியை உடைக்கிறார். உடனடியாக தண்ணீர் கொட்டத் தொடங்குகிறது. இதை அங்கிருக்கும் மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். சிலர் வீடியோ எடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி உடைந்து கீழே விழுகிறது. அப்போது சட்டென ஓடி நூலிழையில் அந்த இளைஞர் உயிர் தப்புகிறார். இன்னும் சில வினாடிகள் அவர் தொட்டி மீது நின்றிருந்தால் கீழே விழுந்து உயிரிழந்திருப்பார்.

சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.