ஆசை வார்த்தை! 6 பெண்கள்! நம்பிச் சென்ற ஆண்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

டெல்லி: ஆசை வார்த்தை கூறி ஆண் ஒருவரிடம் பணம் பறித்த 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.


இதுதொடர்பாக, டெல்லி ரோகிணி செக்டார் பகுதி போலீசில் ஆண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதன்படி, புகார் அளித்த ஆண், கடந்த 3 மாதங்களாக, பெண் ஒருவரிடம் பழகி வந்திருக்கிறார். அவரை அப்பெண் சமீபத்தில் தனியிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும், அறைக்குள் மேலும் சில பெண்களும், சிறுமிகளும், 2 ஆண்களும் இருந்துள்ளனர். அவர்கள் அந்த ஆணை மிரட்டி, நிர்வாணப்படுத்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதனை சமூக ஊடகங்களில் வெளியிடுவோம் எனக் கூறி, ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இறுதியாக, ரூ.10 லட்சம் மட்டுமே தன்னால் தர முடியும், என அவர் கூறியுள்ளார். இதன்பேரில் பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு, தப்பி ஓடிவந்து போலீசில் புகார் கூறியிருக்கிறார். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார், இதுதொடர்பாக 6 பெண்களை கைது செய்துள்ளனர்.