கையில் துப்பாக்கி, கத்தி! கனரா பேங்குக்குள் சென்று மேனேஜரை புரட்டி எடுத்த வாடிக்கையாளர்! அதிர வைக்கும் காரணம்!

இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் அரசு கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் லோன் பெற்று தருவதாகக் கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர் வெற்றிவேலன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் லோன் பெற்று தராமல் காலம் தாழ்த்திக்கொண்டே சென்றதால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் நேற்று வங்கிக்கு சென்றுள்ளார்.

அங்கு இடைத்தரகர் குணாளன் வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகருடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்த அறைக்குள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த வெற்றிவேலன் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளார். குணாளனை காப்பாற்றச் சென்ற வங்கி தலைமை மேலாளர் சந்திர சேகர் மற்றும் ஊழியர்கள் மீதும் சிறிய கத்தி கொண்டு அவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து , காவல்துறைக்கு , சந்திரசேகர் என்பவர் தகவல் அளித்தார். பின்னர் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வெற்றிவேலனைக் கைது செய்து அவர்மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

மேலும் இதுகுறித்து இடைத்தரகர் குணாளனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.