அவள் என் பொண்டாட்டி! நீ ஏண்டா வர்ற? பக்கத்து வீட்டுக்காரரை கடித்துக் குதறிய கணவன்! நாகை பரபரப்பு!

கணவன் மனைவி சண்டையை தடுக்கச் சென்ற நபர் நாயை விட கொடூரமாக கடிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நடிகர் வடிவேலு நடித்த ஒரு சினிமாவில் ஒரு நகைச்சுவை காட்சி. அண்ணன், தம்பிக்குள் ஏற்படும் சண்டையை விலக்க செல்லும்போது, திண்ணையில் அமர்ந்திருக்கும் நபர் வேண்டாம் அங்கே செல்லாதே என்பார். ஆனால் அவர் பேச்சை கேட்காமல் செல்லும் வடிவேலு அண்ணன் தம்பி சண்டையை விலக்கச் சென்று கடைசியில் அவர்காளலேயே கண்டமேனிக்குதாக்கப்பட்டு ரத்தக் காயங்களுடன் வருவார்.

அப்போதுதான் தன்னை செல்லவேண்டாம் என கூறிய நபரும் ஏற்கனவே அண்ணன் தம்பி சண்டையை விலக்க சென்று அடி வாங்கி வந்துள்ளார். அதனாலேதான் எங்கு சண்டை நடந்தாலும் தேவையின்றி மூக்கை நுழைத்து கடைசியிலே நமக்கே ஆப்பாக அமைந்துவிடும் என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. 

நாகை மாவட்டம் தரங்கஞ்சேரி கிராமத்தில் செந்தில்- பாக்கியலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். கல்யாணம் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையில் கணவனுக்கு குடிபோதை பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியை வம்பிழுத்து சண்டை போட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல செந்தில் குடித்துவிட்டு வந்து பாக்யலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார்.

இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் கொத்தனார் மாதவன் கணவன், மனைவி சண்டையை பார்த்து பரிதாபப்பட்டு தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் செந்தில் மனைவியுடனான சண்டையை தடுக்க வந்த செந்திலை கடித்துக் குதறி உள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளியுள்ளார். இதனால் செந்தில் படுகாயம் அடைந்தார். தற்போது செந்தில் வேலைக்கு செல்லமுடியாமல் நாய் கடித்த நோயாளிபோல் மனிதன் கடித்த நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.