ரூ.1.70 கோடி! திமிங்கல வாந்தியின் மலைக்க வைக்கும் மதிப்பு! ஏன் தெரியுமா?

மும்பையில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள் திமிங்கல வாந்தியை விற்பனை செய்வதற்காக காத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


விலங்குகளின் உடல் பாகங்கள், கழிவுகள் ஆகிய அனைத்துமே ரூபாய் மதிப்புடையவை திமிங்கலத்தின் வாந்தி அதன் விந்தணுச் சுரப்பியில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கியது. அம்பர்கிரீஸ் என்றும் அழைக்கப்படும் இது செண்ட் தயாரிப்புத் தொழிலில் முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுகிறது. 

இந்நிலையில் மும்பையின் வித்யா விஹார் ரயில் நிலையம் அருகே திமிங்கல வாந்தியை விற்பதற்காக ஒரு நபர் காத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த நபரிடம் இருந்து கல் போன்ற ஒரு பொருளைக் கைப்பற்றினர். மொத்தம் ஒரு கிலோ மற்றும் 130 கிராம் எடையுள்ள அந்தப்பொருள்தான் திமிங்கல வாந்தி என்றும், அதன் மதிப்பு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்றும் தெரிய வந்தது. 

அதனை செண்ட் தொழிற்சாலையைச் சேர்ந்தவர்களிடம் விற்பதற்காக காத்திருந்த அந்த நபரின் பெயர்  ராகு கிருஷ்ணா துஃபேர் என்று தெரிய வந்தது. அவரிடம் இருந்து அந்தப்பொருளை கைப்பற்றிய போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர்.