ஓடும் ரயிலில் இளம் பெண்ணின் அந்த இடத்தில் கை வைத்து இளைஞன் செய்த மோசமான செயல்! சேலம் பரபரப்பு!

சேலம்: ஓடும் ரயிலில் தன்னிடம் சில்மிஷம் செய்த நபரை பெண் ஒருவர் துரத்திப் பிடித்தார்.


பெங்களூருவை சேர்ந்த 28 வயது பெண், மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த நவம்பர் 5ம் தேதியன்று கொச்சுவேலி - மைசூர் எக்ஸ்பிரஸ்  ரயிலில் சென்றுள்ளார். சேலம் - திருப்பத்துர் அருகே ரயில் சென்றபோது அதிகாலை 5 மணியளவில் அவரை வாலிபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.

அந்த பெண்ணின் உடல்பாகங்களில் கை வைத்து கசக்கிய அந்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். அவரை உடனடியாக, அப்பெண் துரத்தி பிடிக்க தீர்மானித்தார். அதற்குள் சில மணி நேரங்கள் ஓடிய நிலையில், ரயில் எர்ணாகுளம் சென்றடைந்தது. அங்கே அவர் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு, அந்த நபரையும் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டார்.

அவரது பெயர் சுனிஷ் (32 வயது) என தெரியவந்துள்ளது. இதன்பேரில் வழக்குப் பதிந்த எர்ணாகுளம் ரயில்வே போலீசார், இந்த வழக்கை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்தனர். அங்கிருந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் விரைவில் விசாரணை தொடங்கப்படும் என கூறப்படுகிறது.