2 கேரள மலையாள குட்டிகளும்! பின்னே ஒரு தமிழ் பெண்ணும்! கேரள நபரின் லீலைகள்! அதிர்ந்த போலீஸ்!

சென்னையில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபர் கைது செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவைச் சேர்ந்த 46 வயதான அஜித்குமார்  சாலிகிராமத்தில், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பிஸினஸ் செய்துவருகிறார். அஜித்துக்கு தேவிகா (27) என்ற மனைவி மற்றும்  6 வயது மகன் உள்ளனர். இந்த நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில்,  கணவர் அஜித் மீது மனைவி  தேவிகா, தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் விசாரணை,1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும், , 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற  பெண்ணையும் அஜித் குமார் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதை அடுத்து அஜித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து  விசாரணை செய்து வருகின்றனர்.