என் ஆயுசு அதிகமாகும்னு என் மகளையே என் மனைவியாக்கிக் கொண்டேன்..! கொல்லி மலை சித்தர் வெளியிட்ட பகீர் தகவல்!

வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் சுற்றித் திரிந்த நபர் 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


சமீபத்தில் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஒரு நபர் பேசினார். அதில் 16 வயது சிறுமி ஒருவர் தந்தையாலேயே பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து போனை துண்டித்தார். தொலைபேசி மூலம் வந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த சிறுமியின்றி வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த சிறுமி கூறியுள்ளார். இதை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தந்தை எங்கே என கேட்டதற்கு நாமக்கல் கொல்லிமலைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தனர். அவரை தந்திரமாக பிடிக்க நினைத்த போலீசார் மகளுக்கு உடல்நிலை சரியில்லை உடனே புறப்பட்டு வருமாறு சிறுமியின் தாய் மூலம்பேச வைத்தனர்.

இதையடுத்து ஆவடி வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் வேலைக்கு செல்வதில்லை எனவும் எந்நேரமும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவிதான் அவரை காப்பாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது. தன்னை சித்தர் என கூறிக் கொள்ளும் நபர் தன்னுடைய ஆயுசு கெட்டியாக வேண்டும் என்பதற்காகத்தன் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.