அமித்ஷாவுக்கு மரண பயத்தை காட்டிய மம்தா படை! கொல்கத்தா களேபரம்!

கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் தான் நூலிழையில் உயிர் பிழைத்ததாக அமித்ஷா கூறியுள்ளார்.


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்த நிலையில் தேர்தல் ஆணையம் மூலம் பாஜக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட ஏற்பாடுகள் மூலம் பேரணியில் லட்சக்கணக்கான தொண்டர்களை பாஜக குவித்தது.

இதனால் எரிச்சலடைந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்தனர். பாஜக பேரணி வந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே கொடுமை அவர்கள் கருப்புக் கொடியுடன் அமித்ஷாவிற்கு காத்துக் கொண்டிருந்தனர். அதுவரை அனைத்தும் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில் அமைச்சர் நெருங்கியவுடன் கருப்புக் கொடியுடன் பண்ணாமல் தொண்டர்கள் ஆவேசமாக பாஜகவினரை நோக்கிப் பாய்ந்தனர். 

இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மற்றும் திருத்தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. கல்லூரி ஒன்றுக்குள் நின்றுகொண்டு திருநாமம் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவினரை நோக்கி கற்களை வீசினர். பதிலுக்கு பாஜகவினரும் தாக்குதல் தொடுத்தால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. இதற்கிடையே மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாஜக தலைவர் அமித் ஷாவை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொல்கத்தாவில் நடைபெற்றது வெறும் வன்முறை அல்ல என்று பதற்றத்துடன் கூறினார். ஆண்கள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிஆர்பிஎஃப் வீரர்கள் மட்டும் இல்லை என்றால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மேற்கு வங்க மாநிலம் தனக்கு அன்னியமானது இல்லை என்றும் அமைச்சர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் பதற்றத்துடன் இருந்ததை காணமுடிந்தது. இதற்கு மம்தா படை நேற்று நடத்திய தாக்குதல் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.