விந்து ஜூஸ்..! பெண் சினிமா விமர்சகரை முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகரின் ரசிகர்கள்!

திருவனந்தபுரம்: மம்மூட்டி படத்தை விமர்சித்ததால், அவரது ரசிகர்கள், பத்திரிகையாளர் அன்னா வெட்டிக்காட்டை கடுமையாக சீண்டி வருகின்றனர்.


சினிமா நடிகர்களை பற்றி யார் விமர்சித்தாலும், அவர்களின் ரசிகர்கள்  சம்பந்தப்பட்ட நபரை சமூக ஊடகங்கள் வழியாக கேலி, கிண்டல் செய்வது வழக்கமாகும். இதன்படி, Firstpost ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் சினிமா விமர்சகர் Anna Vetticad சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் 'கானகந்தர்வன்' (Ganagandharvan) என்ற சினிமா படத்தை விமர்சித்து, கட்டுரை எழுதியிருந்தார்.

ஆனால், இதற்கு, மம்மூட்டியின் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பொங்கி தள்ளிவிட்டனர்.   ''அன்னா குழந்தைகள் பாலியல் பலாத்காரத்தை ஆதரிக்கிறார்; அவர் மலத்தை தின்னலாம்; எனது விந்து ஜூசை  குடிக்கலாம்,'' என்றெல்லாம் பலரும் இஷ்டத்துக்கு கமெண்ட் பகிர அன்னா வெட்டிக்காட் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.  

அதில் ''நீண்ட நாளாக சினிமா விமர்சனம் எழுதி வந்தாலும், மம்மூட்டி ரசிகர்களின் தற்போதைய செயல் மிக அநாகரீகமாக உள்ளது. பெண்கள் இந்த உலகில் பலவித கொடுமைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக, சமூக ஊடகங்களிலும் அவர்களுக்குக் கொடுமைகள் நடக்க தொடங்கியுள்ளன. அதற்கு நானே உதாரணம்,'' என்று அன்னா சூடாக விமர்சித்துள்ளார்.  

ஏற்கனவே பாகுபலி படத்திற்கு விமர்சனம் எழுதியதற்காக, அன்னா கடும் விமர்சனத்திற்கு ஆளானவர் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய விசயமாகும்.