நோபல் பரிசு மேதையை பா.ஜ.க. அவமானம் செய்யலாமா..? மம்தா போர்க்குரல்.

பொருளாதார மேதையான அமர்த்தியா சென், ஒரு சட்டவிரோத குடியேறி என்று கூறப்படுவதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க அரசுக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் எழுதிய கடிதத்தில், வளாகத்துக்குச் சொந்தமான பல இடங் கள் தவறான முறையில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும், வளாகத்துக்குள் அங்கீகாரம் பெறாமல் குடியிருப்பவர்களின் பட்டியலையும் கடிதத்தில் சுட்டிக் காட்டினர். அப்பட்டியலில், பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பெயரும் இடம் பெற்றிருந்தது.

குத்தகைக்கு விடப்பட்ட 1250 ச.அடி மனையைத் தாண்டி, கூடுதலாக 130 ச.அடி இடத்தினை அமர்த்தியா சென் ஆக்கிரமித்து இருப்பதாக விஸ்வ-பாரதி வளாக எஸ்டேட் அலுவலகம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை, மேற்கு வங்க முதல்வர் மம்தா அமர்த்தியா சென்னுக்கு எழுதிய கடிதத்தில், ”ஒரு சகோதரியாக நான் என்றுமே உங்கள் பின் நிற்பேன்'' என்று ஆறுதல் கூறினார். “பாஜகவின் சித்தாந்தத்திற்கு செவி சாய்க்கவில்லை என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் எதிர்கொண்டு வருவதாகவும்'' அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தாமஸ் டபிள்யூ. லாமண்ட் பல் கலைக்கழக பேராசிரியராக பணி யாற்றி வரும் அமர்த்தியா சென், 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையும், 1999 இல் இந்திய அரசின் மிகப்பெரிய ‘பாரத ரத்னா' விருதையும் பெற்றார். பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட் டணியின் சில கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்.

‘தி டெலிகிராப்' என்ற ஆங்கில நாளிதழிடம் பேசிய அமர்த்தியா சென், “சாந்திநிகேதன் கலாச்சாரத்திற் கும், விசுவ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக கூறினார். “சாந்திநிகேதனில் நான் பிறந்து வளர்ந்ததால், சாந்திநிகேதன் கலாச்சாரத்திற்கும், துணைவேந் தருக்கும் இடையிலான பெரிய கலாச்சார இடைவெளியைப் பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியும்.

மேற்கு வங்க மாநிலத்தின்மீதான கட் டுப்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு டில்லி மத்திய அரசாங்கத்தால் அதிக அதிகாரம் பெற்றுள்ளவராகத் தன்னை அவர் கருதிக் கொண்டுள்ளார்'' என்றும் கூறியிருக்கிறார்.