நடுரோட்டில் இளம் பெண்ணின் சேலையை உருகிய ஆண் போலீஸ்! பதற வைக்கும் சம்பவத்தின் அதிர வைக்கும் வீடியோ உள்ளே!

ஐதராபாத்: போராட்டம் நடத்திய பெண்களின் புடவை போலீஸ் அதிகாரி கையில் சிக்கிய சம்பவம் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 40,000க்கும் அதிகமானோர் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வாரங்கல் பகுதியில் உள்ள ஹானம்கொண்டா நகரில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆண்களும், பெண்களும் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் பெண்களில் இரு குழுவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் மோதலாக மாறவே, உடனடியாக அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.  

இதன்போது, போலீஸ் அதிகாரி ஒருவரின் கையில், பெண்கள் சிலரின் புடவை சிக்கிக் கொண்டது. தள்ளு முள்ளு சூழல் நிலவியதால், பெண்கள் புடவையை சரிசெய்ய முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். பிறகு, போலீஸ் அதிகாரி கையில் எதேச்சையாக சிக்கிய புடவை விடுபட்டதும் உடனே அவர்கள் புடவையை சரிசெய்தபடி முக சுழிப்புடன் கலைந்து சென்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெண்கள் அதிகம் உள்ள பகுதியில், பெண் போலீசாரை பணியில் ஈடுபடுத்தாமல், ஆண் போலீசாரை பயன்படுத்தினால் இப்படித்தான் தர்மசங்கடமான நிலை உருவாகும். இதைத் தவிர்க்க, போதுமான எண்ணிக்கையில் பெண் போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, பலரும் வலியுறுத்தியுள்ளனர்.