பெண் கவுன்சிலருடன் ஒரு குடும்பமே உல்லாசம்! செல்போனில் வீடியோ! ஆண் கவுன்சிலரின் லீலைகள்!

பெண் கவுன்சிலருடன் உல்லாசமாக இருந்த போது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய ஆண் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் எம்ஐஎம் கட்சியின் கவுன்சிலராக உள்ளவர் மாதின் ரஷித் சயீத். இந்நிலையில், இவர் மீது பிம்ப்ரி சின்சிவாட் போலீசில், சக பெண் கவுன்சிலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 27 வயதாகும் அந்த பெண் கவுன்சிலர், ரஷித் தன்னை பலமுறை பலவந்தமாக, பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ரஷித், அவரது சகோதரர் மற்றும் மைத்துனர் ஆகியோரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கவுன்சிலர் தெரிவித்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பேரில், வழக்குப் பதிந்த போலீசார், அவர்கள் 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ''துப்பாக்கி முனையில் அந்த இளம்பெண் கவுன்சிலரை அவர்கள், மிரட்டி, பலாத்காரம் செய்துள்ளனர். இதனை  படம்பிடித்து வைத்துக் கொண்டு, அடிக்கடி அவரை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், மயக்க மாத்திரைகள் கலந்து கொடுத்தும், இந்த குற்றத்தைச் செய்து வந்திருக்கிறார்கள்.

தற்போது அனைவரும் பிடிபட்டுள்ளனர். கவுன்சிலராக இருந்துகொண்டு, இப்படி முறைகேடான காரியத்தில் ஈடுபட்டிருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,'' என்று தெரிவித்தனர். ஆனால் பெண் கவுன்சிலர் விருப்பத்துடன் தான் உல்லாசம் அனுபவித்ததாக கவுன்சிலர் குடும்பம் பரிதாபமாக கூறி வருகிறது.