ஆண்களுக்கும் வந்துவிட்டது கருத்தடை ஊசி..! ஒருமுறை ஊசி போட்டால் 13 வருடம் ஜாலி! எப்படி தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை கருத்தடை செய்வது என்றால் ஆண்கள் ஆனாலும் சரி பெண்களானாலும் சரி நீண்ட வலி நிறைந்த செயல்முறை தான்.


இதற்க்கு பயந்தே பலர் கருத்தடை செய்து கொள்வதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படும் நிலையில், மற்றொரு பக்கம் பாலியல் ரீதியான குற்றங்களும் அதிகரித்து வருவகிறது. இந்த நிலையில் தான் கடந்த 13 ஆண்டுகளாக பாடுபட்டு இந்திய மருத்துவ கவுன்சில், ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டறிந்துள்ளது.

மூன்றுக்கட்டங்களாக சோதனை செய்யபட்டு, சுமார் 300 க்கும் அதிகமான நபர்கள் இதில் சோதனைக்கு உள்ளாக்கபட்டனர், இதனை தொடர்ந்த இந்த முயற்சி வெற்றி பெற்று உள்ளது. எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் கிட்டதட்ட 97.3 சதவீதம் வரை 13 ஆண்டுகள் காலம் வரை வெற்றிகரமாக செயல்பட கூடிய இந்த கருத்தடை ஊசி முழுமையாக சோதனை முடிவை பெற்றுள்ளது. 

ஒரு பக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் பிரிட்டன் என பல நாடுகள் இந்த கருத்தடை குறித்த மருத்து சோதனை நடைபெற்று அவை மிக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.