கற்பழிப்புகளை குறைக்க வந்தாச்சு செக்ஸ் ரோபாட்கள்! எதுக்கு தெரியுமா?

டோக்கியோ: செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட ரோபாட்கள் நடைமுறைக்கு வர தொடங்கியுள்ளன.

உலகம் முழுக்க, பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இந்த சூழலில், பாலியல் குற்றங்களை குறைக்கும் வகையில், செக்ஸ் ரோபாட்கள், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைமுறைக்கு வர தொடங்கியுள்ளன.

இதன்காரணமாக, தங்கள் நாட்டில் பாலியல் குற்றங்கள் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதாக, அந்நாட்டினர் பெருமையுடன் கூறி வருகின்றனர். ஆம். குடும்ப வாழ்க்கைக்காகவும், உடலுறவு கொள்வதற்காகவும், பிரத்யேக செக்ஸ் ரோபாட்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதில், ஆண் மற்றும் பெண் ரோபாட்களும் உள்ளன. எனவே, அவரவர் தேவைக்கேற்ற ரோபாட்டை வாங்கி, செக்ஸ் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழலில் பலரும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இதுபோல, விரைவிலேயே செக்ஸ் ரோபாட்கள் உலகம் முழுக்க பாலியல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என்றும், விபசார விடுதிகளில் கூட செக்ஸ் ரோபாட்களை வைத்து தொழில் செய்ய தொடங்குவார்கள் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதுதவிர, நமது   தேவைக்கு ஏற்ப, நாம் விரும்பும் ரோபாட்டின் செயல், தோற்றத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய செட்டிங்ஸ் அமைப்புகள் இவற்றில் உண்டு. ரோபாட்டுகளுக்கென ஸ்கின் பகுதிகளையும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இதனால், அச்சு அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபாட்களை உங்கள் விருப்பம்போல பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும், இந்த பொம்மைகளை இந்திய அரசு அனுமதிக்குமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.