மகனுடன் சேர்ந்து கணவனை உயிரோடு எரித்து கொலை செய்த இளம் மனைவி! பழியை செல்போன் மீது போட்டது அம்பலம்!

மலேசிய அரசு நிறுவனத்தின் சிஇஓ.,வை கொன்ற புகாரில், அவரது மனைவி மற்றும் மகன்கள் சிக்கியுள்ளனர்.


மலேசிய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கிரேடில் ஃபண்ட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், அந்நாட்டில் செயல்படும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் சிஇஓ.,வாக நஸ்ரின் ஹாசன் பணிபுரிந்து வந்தார். அவர், கடந்த 2018, ஜூன் மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனையில் அவர் உறங்கும்போது, மொபைல்ஃபோன் வெடித்து தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக, தெரியவந்தது. எனினும், அவர் இறந்து சில மாதங்கள் கடந்த நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதன்பேரில், மறுபரிசோதனை செய்தபோது, அவரது தலை, முகத்தில் தீக்காயங்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த தீக்காயம், ஏதேனும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தால் ஏற்படுவதைப் போல தோன்றின. இதையடுத்து, ஹாசனின் மனைவி சமிராவை தீவிரமாக போலீசார் விசாரித்தனர். 

ஏற்கனவே திருமணமாகி, பருவ வயதில் 2 மகன்கள் உள்ள நிலையில், முதல் கணவரை பிரிந்து, ஹாசனை சமிரா 2வது திருமணம் செய்துகொண்டார். இதில், கருத்து வேறுபாடு காரணமாக, தனது மகன்களுடன் இணைந்து, ஹாசனை பெட்ரோல் ஊற்றி எரித்து, சமிரா கொன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.