சென்னை: சமீபத்தில் வெளியான தமிழ் சினிமா படங்கள் சிலவற்றுக்கு, மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திடீர் தடை! அதிர்ச்சியில் விஜய் சேதுபதி!
தமிழ் சினிமா வசூலில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தனி சந்தை உள்ளது. இங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழ் சினிமாவை ரசித்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில், மலேசிய அரசு, சமீப நாட்களாக, தமிழ் உள்ளிட்ட பல்வேறு சினிமா படங்களுக்கு, சில தனிப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை கொண்ட சினிமா படங்களை ரிலீஸ் செய்வதில்லை என மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகி, சர்ச்சையை கிளப்பிய 90 எம்எல் படத்திற்கு, மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், சாருஹாசன் நடித்த தாதா 87 போன்ற படங்களை ரிலீஸ் செய்யவும் மலேசிய அரசு மறுத்துவிட்டது. இதுபோல, புதியதாக ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இப்படிச் செய்வதால், தமிழ் சினிமா படங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.